Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)
புதிய தொழிலாளர் நல சட்டத்தின் வாயிலாக தொழிலாளர் நலனும் பணியும் பாதுகாக்கப்படுமா? என்று நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான தயாநிதிமாறன் மத்திய தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர் நலனுக்கு விரோதமானவை” என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதையும் பத்திரிகை ஊடகங்கள் அதுபற்றி சுட்டிக்காட்டுவதையும் ஒன்றிய அரசு அறிந்துள்ளதா? அவ்வாறு அறிந்திருந்தால் அதன் விவரங்கள் என்ன?
நான்கு புதிய சட்டத்திருத்தங்களை அறிவிப்பதற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
குறிப்பிட்ட சட்டத்திருத்தங்களின் அமலாக்கத்திற்கான கால அட்டவணையின் விவரங்கள், ஒப்புதல் அளித்த நடைமுறைக்கு வந்த தேதி விபரங்கள் என்ன? மாநில வாரியாக தொழிலாளர்களுக்கான இடைக்கால பாதுகாப்புகள் மற்றும் சமூக பாதுகாப்பு விவரங்கள் என்ன?
100 முதல் 300 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள் அரசின் முன் அனுமதி இல்லாமல் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பு செய்யலாம் என்ற விதியை ஒன்றிய அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது? தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு மற்றும் வேலை உத்தரவாதம் மீதான அரசின் நோக்கம் என்ன?
பங்குசந்தை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஒப்பந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், குறிப்பாக ஜவுளி, கட்டுமானம் மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) போன்ற துறைகளில் உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் நல பாதுகாப்பு என்ன? அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளின் விவரங்கள் என்ன? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ