இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் - தபால் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர்
கோவை, 16 டிசம்பர் (ஹி.ச.) நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வ
E filing


கோவை, 16 டிசம்பர் (ஹி.ச.)

நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில் அந்த நடைமுறைக்கு எதிர்ப்புகள் வழுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று

இ ஃபைலிங் முறையை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக கண்டன பதாகைகளையும் முழக்கங்களை எழுப்பி வந்த 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் மத்திய அரசிற்கு இ ஃபைலிங் முறையை வாபஸ் பெற வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

Hindusthan Samachar / Durai.J