வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான மின்சார ரெயில் விரைவில் இயக்கி சோதனை நடத்தப்படும் - ரயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) சென்னை கடற்கரை-வேளச்சேரி உயர்மட்டப்பாதையில், தினமும் 100 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் மேம்பால
விரைவில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்தை மின்சார ரெயிலை இயக்கி சோதனை


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை கடற்கரை-வேளச்சேரி உயர்மட்டப்பாதையில், தினமும் 100 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் மேம்பால ரெயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பணிகள் முடங்கின.

2022-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் பணிகள் நடந்தன. 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரெயில் பாதை இணைப்பு பணிகள் முடிந்துள்ளன.

இதையடுத்து, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த நவம்பர் 7-ந்தேதி 10 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

2-வது முறையாக சரக்கு ரெயில் பெட்டிகளுடன் இணைத்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளம் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விரைவில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்படும் எனவும், அதன் பின்னர், பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில், அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM