Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிழக்கு தெரு மைதானம் சந்திப்பு மற்றும் ஜெயராம் நகர் பகுதிகளில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தொடங்கப்பட்ட அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர்ந்து 300 ஆவது நாளை எட்டியதால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் இந் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரயா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாைளை முன்னிட்டு முதலமைச்சர் அவர்களின் துணைவியார் அண்ணியார் அவர்களால் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து 300 ஆவது நாளாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றதை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார்.
ஒரு ஆண்டு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 300 ஆவது நாளை எட்டி உள்ளது. மீதம் உள்ள நாட்களும் சிறப்பு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட உள்ளது.
பல்வேறு உணவுகள் சூடாகவும் சுவையாகவும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக அதனை பெற்று உண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
மெரினாவில் ஆதரவற்றோர்களுக்கு கட்டப்பட்டுள்ள இரவு தங்குமிடம் எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற கேள்விக்கு,
துணை முதலமைச்சர் அவர்களது தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவற்றோர்களுக்கு இரவு தங்குமிடம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் மெரினா கடற்கரை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆதவற்றோர்களுக்கான இரவு நேர தங்குமிடம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது எனவும் முதற்கட்டமாக மெரினாவில் ஆதவற்றோர்களுக்காக தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற இடங்களிலும் அது போல தங்குமிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு,
ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பாக வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அந்த செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, சிப் பொருத்தி, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam