Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)
சென்னை சூளையில் ரூ.45.70 இலட்சம் செலவில் கட்டப்பட்ட வேணு கோபாலசுவாமி பஜனை மடத்தை அமைச்சர் சேகர்பாபு பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைத்தார்
சூளை வேணு கோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சூளையில் ரூ. 45.70 இலட்சம் செலவில் கட்டப்பட்ட வேணு கோபாலசுவாமி பஜனை மடத்தினை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைத்து சௌகார்பேட்டை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ரூ.89.70 இலட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தி வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வழங்கி வருகின்றது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மண்டலங்களில் ரூ. 86.68 கோடி மதிப்பீட்டில் 323 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 207 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை சூளை, வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் ரூ.15.80 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இத்திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் சேகர்பாபு ரூ.45.70 இலட்சம் செலவில் கட்டப்பட்ட சூளை வேணுகோபாலசுவாமி பஜனை மடத்தினை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் சௌகார்பேட்டை, பள்ளியப்பன் தெரு, அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ரூ.89.70 இலட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ