சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது - பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த சீமான்
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச) டிசம்பர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகுழுக்கூட்டத்திற்கு திரள் நிதி தேவைப்படுவதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அந
Seeman


Rwe


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)

டிசம்பர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகுழுக்கூட்டத்திற்கு திரள் நிதி தேவைப்படுவதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் அந்த பதிவில் கூறுகையில்,

எங்களுடைய உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

நம்முடைய நாம் தமிழர் கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் (மார்கழி 12) 27-12-2025 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸ் என்கிற திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

என் அன்பு உறவுகள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.

இந்த நிகழ்வை நடத்துவதற்கு நமக்கு பெரும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. வழமையாக என் அன்புச் சொந்தங்கள் திரள்நிதி திரட்சியின் மூலமாக நீங்கள் நிதியளித்து எங்களுடைய கைகளை வலிமைப்படுத்துவீர்கள்.

அதைப்போல இம்முறையும் எங்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.

துளித்துளியாய் இணைவோம், பெருங்கடலாகும் கனவோடு, நாம் தமிழர் என்று நிதி பங்களிப்பதற்கான லிங்கை அந்த பதிவில் அவர் இணைத்துள்ளார்

Hindusthan Samachar / P YUVARAJ