Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 16 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி யூனியனில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என மொத்தம் 1,03,467 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவரது அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதன்படி புதுச்சேரி மாவட்டத்தில் 8,51,775 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,99771, நபர்களும் பெண்கள்4,51,869 நபர்களும்
மூன்றாம் பாலினம் 135 பேரும் உள்ளனர்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக குடிபெயர்ந்த இரட்டை வாக்காளர் என 85,531 நீக்க நீக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்த வாக்காளர்களில் 10.04% ஆகும்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்,
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் மரணம் அடைந்துவிட்டதாகவும் 45 ஆயிரத்து 312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 பேர் வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்கள் எனவும் 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் இடம் பெற்றுள்ளார்கள் என்றும், மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களாக நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டுள்ளது வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் இன்று
( டிசம்பர் 16 ) முதல் ஜனவரி
15-ம் தேதி வரை உரிமை கோரல் செய்ய முடியும் என்றும் தவறான வாக்காளர் சேர்க்கப்பட்டிருந்தால் ஜனவரி 15-ம் தேதி வரை மறுப்பு தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam