சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சார்ஜர் போடப்பட்டிருந்த செல்போனை திருடிய பிகரை சேர்ந்த இளைஞர் கைது
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்., பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் செல்போனை சார்ஜ் போட்டு வைப்பது வழக்கம். அந்த வகையில்., புதுச்சேரியை சேர்ந்த பமிதா பானு., அதே போல் கரூரை சேர்ந்த சங்கீதா ஆக
Pol


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்., பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் செல்போனை சார்ஜ் போட்டு வைப்பது வழக்கம்.

அந்த வகையில்., புதுச்சேரியை சேர்ந்த பமிதா பானு., அதே போல் கரூரை சேர்ந்த சங்கீதா ஆகிய இருவரின் செல்போன் திருடு போனது குறித்து., சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து., அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வடமாநில நபர் ஒருவர் செல்போனை லாவகமாக எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்நிலையில்., ரயில் நிலையத்தில் சாதாரண உடையில் காத்திருந்த குற்றத்தடுப்பு போலீசாரின் கண்ணில் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன்ராய்., ஹரியானாவை சேர்ந்த முகேஷ் ஆகியோரை பிடித்து நடத்திய விசாரணையில்., ஜார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை திருடியதை ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து., கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார்.

ஜார்ஜ் டவுன் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ