Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கம் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவன மேலாளர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், சிபிஐ எம்எல் மாவட்ட பொறுப்பாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 40 குப்பை அள்ளும் வாகனங்களுடன் ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (டிசம்பர் 16) போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் 125 பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b