டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4 - ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வர
டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4 - ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை  - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நேற்று (டிசம்பர் 15) தொடங்கியுள்ளது. இவர்களுக்கும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

மாணவர்கள் அனைவருக்கும் காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கவும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வரின் விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணிக்குத் தேர்வு தொடங்கி, 1 மணி வரை நடைபெறுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 23ஆம் தேதி வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 23ஆம் தேதியோடு அரையாண்டுத் தேர்வுகள் முடிவுபெறும் நிலையில், 24ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் ஆகிய கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

Hindusthan Samachar / vidya.b