Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)
மெக்கா நகருக்கு புனித ஹச் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் , பயணத்திற்கு ஒருநாள் முன்பாக கட்டணமின்றி தங்கிக் கொள்ளும் வகையில் ஹஜ் இல்லம் சென்னை விமான நிலையம் அருகே அமைய உள்ளது.
சென்னை நங்கநல்லூரில் ரூ.39.20 கோடியில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று
(டிசம்பர் 16) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் சா.மு. நாசர் , தா. மோ . அன்பரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 மாடிகள் 400 அறைகளுடன் அமைய உள்ள ஹஜ் இல்லத்தில் நாள்தோறும் 400 ஹச் பயணிகள் தங்க முடியும் என்றும் 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவுற்று ஹஜ் இல்லம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b