பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் காலவரையற்ற போராட்டம்
சென்னை, 16 டிசம்பர் (H.S.) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் டிசம்பர் 16 ம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல
டாஸ்மாக்


சென்னை, 16 டிசம்பர் (H.S.)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் டிசம்பர் 16 ம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 22 ஆண்டுகளாக சொற்ப சம்பளத்தில் குறைந்த பட்ச ஊதியம் தராமல் அரசும் நிர்வாகமும் டாஸ்மாக் பணியாளர்களை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இதற்கு மாறாக வாடிக்கையாளர்களிடம் கையேந்த வைத்து விட்டு பணி பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக்கி வருவதாக புகார் தெரிவித்தனர்.

டாஸ்மாக் துறையில் தொடர்ச்சியாக இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், காற்றோட்டம் இல்லா நிலை, கழிப்பிட வசதி, தேவையான ஆட்கள், பணி பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை பார்க்கும் நிலையால் பணிச்சுமையை உண்டாக்கி வருவது அதிருப்தியை உண்டாக்கி வருவதாக குற்றம் சாட்டினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam