உத்திரபிரதேசத்தில் கடும் பனி மூட்டத்தால் பஸ் மோதி விபத்து - 4 பேர் பலி
உத்திரபிரதேசம், 16 டிசம்பர் (ஹி.ச.) உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே டெல்லி ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடம் பனிமூட்டம் காரணம
விபத்து


உத்திரபிரதேசம், 16 டிசம்பர் (ஹி.ச.)

உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே டெல்லி ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடம் பனிமூட்டம் காரணமாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து எறிந்தன.

2க்கும் மேற்பட்ட பஸ்கள், கார்கள், வேன்கள் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 4 உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam