அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க கோரி திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க கோரி திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும்
Admk


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க கோரி திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை எங்கேயும் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்த போது பேசிய அவர்,

11,12வது படிக்கும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதிமுக ஆட்சியின் 10 வருடத்தில் 51 லட்சத்து 31 ஆயிரத்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளோம். இன்று வரை பல மாணவர்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு முடிந்த பின்பு வாக்குக்காக இலவச மடிக்கணினி தருவதாக கூறுகிறார்கள். அதிலும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் என்பது மாணவர்களுக்கு பயனளிக்காது. அதிமுக வாக்கு பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரவில்லை.

முழுமையான அரசாணையை தற்போது வரை திமுக வெளியிடவில்லை. இலவச சைக்கிள், மடிக்கணினி, நீட்டுக்கான பிரச்சனை தீர்வு என அதிமுக தான் கொண்டு வந்தது. ஒரு மாதத்தில் 10 லட்சம் பேருக்கு எப்படி மடிக்கணினி வழங்க முடியும், அமைச்சர் அன்பில் மகேஷ் சரியான தரவுகளை வெளியிடவில்லை.2000 கோடிக்கு கருணாநிதிக்கு புகழ் சேர்க்க நிதி உள்ளது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லை. திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில் இதில் சிக்கல் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

11 ஆம் வகுப்பு முதல் 6 வருடம் தொடர்ந்து பயன்படுத்துவதால் வேலைக்கு செல்லும் போது பெருமதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ