Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 17 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முதல் கையெழுத்திட்ட காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை கண்டித்து சுதேசி மில் அருகே
தீபப்போராட்டத்தை முருகப்பக்தர்கள்-
இந்து இயக்கங்கள் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது..
முருகனை சீண்டுவதையே திமுக வேலையாக வைத்துள்ளனர்.
1920ல் இந்த வழக்கு மதுரை சப்-கோர்ட்டில் வந்தது..
100 ஆண்டு வழிமுறை தான் தற்போது கேட்கிறோம்,தர்க்காவை மூடி மதக்கலவரத்தை தூண்ட திமுக முயற்சி செய்தது என கூறினார்.
முருகனுக்கு இரு மனைவி என்பதால் இரு தீபம் ஏற்ற முடியுமா என தமிழக அரசு வழக்கறிஞர் பேசியதற்கு
தமிழக அரசு ஒவ்வொரு முருகப்பக்தன் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
காந்தி மீது மிகப்பெரிய மரியாதை பாஜகவிற்கு உண்டு.அதனால்லதான் தூய்மை இந்தியா திட்டத்தை காந்தி பெயரில் கொண்டு வந்ததே பிரதமர் மோடி தான் என்றார்.
ஒரே திட்டத்தை 50 ஆண்டுகளுக்கு தொடர முடியாது,100 நாள் வேலை என்பது 125 ஆக உயர்த்தியுள்ளோம்
அதில் என்ன குற்றம் சொல்ல...?
100 நாள் வேலை இலவசம் கிடையாது..உழைப்பவர்களுக்கான உரிமை..இதற்கான நிதியை மாநில அரசு 40% தர வேண்டும் என்கிறோம் அதில் தவறு இல்லை,வளர்ந்த பாரதம் என்பது காந்தியின் கனவு,காந்தியின் பெயரை எங்கும் விட்டு கொடுக்க மாட்டோம்,திட்டத்தை விரிவுபடுத்தி சரியானவர்களுக்கு கொடுக்கிறோம்,
வேலை கிடைக்காவிட்டால் பென்ஷன் கொடுப்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை...
கம்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னு இருக்க வேண்டும்..கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு இருக்க வேண்டும்..எல்லாவற்ற்றிகும் கம்முன்னு இருக்க கூடாது..
விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல.
ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நிற்க்கனும், இல்ல இந்த பக்கம் நிற்க்கனும்,நடு ரோட்டில் நின்றால் அடிபட்டுதான் போவார்.
பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்,புதுச்சேரி வந்த போது சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசிய விஜய் ஏன் தற்போது பெரும்பான்மையினர் விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளார். மக்களும் அவரை பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள். தேர்தலில் தெரியும். புதுச்சேரி மக்களும் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை...
சபரிமலையில் எதிர்ப்பதற்கு காரணம் இருக்கும் நடைமுறையை மாற்றுவதற்கு தான்,திருப்பரங்குன்றம் விவாகாரத்தில் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது தான் என விசிக தலைவர் திருமாவளவனுக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.
Hindusthan Samachar / Durai.J