Enter your Email Address to subscribe to our newsletters

சிட்னி, 17 டிசம்பர் (ஹி.ச.)
ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவனான சஜித் அக்ரம் என்பவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது.
பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார்.
மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது.
அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 40, என தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக, அவர் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:
அஹமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடிங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸி., மக்களின் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM