வெள்ளப்பெருக்கு காரணமாக கவியருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு
கோவை, 17 டிசம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள, கவியருவி ஆழியாறு வனப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட நீர்நிலைகளுள் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் விரும்பி குளித்துவரும
வெள்ளப்பெருக்கு காரணமாக கவியருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு


கோவை, 17 டிசம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள, கவியருவி ஆழியாறு வனப் பகுதியில் அமைந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட நீர்நிலைகளுள் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் விரும்பி குளித்துவரும் கவியருவிக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.பல்வேறு மூலிகைகள் கலந்து மலை பகுதிகளில் இருந்து நீர் வருவதால், இந்த அருவி நீர் உடலுக்கு நன்மை தரும் என நம்பிக்கை நிலவுகிறது.

இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (டிசம்பர் 17) வனத்துறை தடை விதித்துள்ளது.

நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b