Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் சமக்கல்வி உரிமையைப் பறித்து, கோபாலபுர வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அக்கறை காட்டும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தனது சவுக்கடி தீர்ப்பின் மூலம் நசுக்கியுள்ளது உச்ச நீதிமன்றம் என்று பாஜக மூத்த தலைவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வாசற்படியருகிலேயே போதை பொருட்களும் டாஸ்மாக்கும், இடிந்து விழும் மேற்கூரைகளையும், மரத்தடி வகுப்பறைகளையும் கொண்ட கூடாரங்களாக அரசுப் பள்ளிகளைச் சீரழித்துவிட்டு, நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தேவையில்லை எனக் கேவலமாக முட்டுக் கொடுத்த திமுக அரசை விளாசியுள்ளது நீதிமன்றம்.
ஆறு வாரங்களுக்குள் நவோதயா பள்ளிகளுக்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் விதித்த காலக்கெடுவில் இருந்தே, விடியா மூஞ்சி திமுக அரசின் அஸ்தமத்திற்கான கவுன்டவுனும் தொடங்கிவிட்டது.
தூசி படிந்து போன மொழி அரசியலைக் காலங்காலமாகக் காட்டி நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் அமைக்க மறுக்கும் திமுக அரசின் பாசிச பாச்சா வேலைகள் இனியும் எடுபடாது.
நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் நாளும் தமிழகத்தின் எதிர்காலத்தை வதைக்கும் தீயசக்தி திமுகவை வேரோடு பிடுங்கியெறியப்படும் நாளும் நெடுந்தூரமில்லை என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ