Enter your Email Address to subscribe to our newsletters

கோவை,18 டிசம்பர்(ஹ.ச.)
கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.
இதுகுறித்து,புரோஜோன் மால் வனிக வளாகத்தின் மைய தலைவர் அம்ரிக் பானேசர் கூறும் போது :-
வருடம் முழுவதும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்களை உற்சாகத்துடனும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை கொண்டாடும் வகையிலும் பல சிற்ப்பு ஏற்பாடுகளையும் சலுகைகளையம் வழங்கி வரும் புரோஜோன் மால் இந்த வருடம் மேலும் ஒரு புதிய முயற்சியாக இப்பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக 40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்நோமேன் வில்லேஜ் என்ற புதிய அனுபவத்தை பொது மக்கள் பார்வைக்காக துவக்கியுள்ளது.
இத்திருவிழாவை பொது மக்கள் 2025 டிசம்பர் 16 முதல் - 2026 ஜனவரி 1 வரை இலவசமாக பார்வையிடலாம்.
மேலும் மால் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் மிகவும் பிரம்மாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் ஸ்நோமேன் வில்லேஜ் மற்றும் மேஜிக்கல் லைட்டிங் கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரூ.4999/- ஷாப்பிங் செய்பவர்களுக்கு ரூ.250/- உணவு கூப்பன் வழங்கப்படவுள்ளது.
இந்த புரோஜோன் கிறிஸ்துமஸ் கார்னிவெல் கொண்டாட்டங்களை இந்த பண்டிகை கால விடுமுறையுடன் செலவிட கோவை மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV