Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் தொடங்கியுள்ளன. மாநாடுகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் சந்திப்பு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
திமுக எம்பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அக்கட்சியை சேர்ந்த ஒன்பது பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஆட்சியர் ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்மந்தம் உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அத்தேர்தலில் 40/40 திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இப்போதும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் கனிமொழி, தமிழரசி உள்ளிட்ட இரண்டு பெண்கள் உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம். அப்துல்லா, டாக்டர் எழிலன் உள்ளிட்ட அறிவார்ந்த அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் அவர்கள் வன்னியர் பொது சொத்து நல வாரியத் தலைவராகவும், CMDA துணைத் தலைவராகவும் இருந்தவர்.
இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை
தயாரிக்க உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN