மின்சாரம் அடிப்படை தேவை - டெல்லி உயர்நீதிமன்றம்
புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.) மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவை மற்றும் வாழ்க்கை உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்த மைக்கி ஜெயின் என்பவர், பொருளாதார பிரச்சனை காரணமாக மின்கட்டணத்தை செ
டெல்லி நீதிமன்றம்


புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)

மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவை மற்றும் வாழ்க்கை உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்த மைக்கி ஜெயின் என்பவர், பொருளாதார பிரச்சனை காரணமாக மின்கட்டணத்தை செலுத்த தாமதமானதால் அவரது குடியிருப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்திய பிறகும், வீட்டு உரிமையாளரின் ஆட்சேபணை கடிதம் இல்லை எனக் கூறி மின்சாரம் வழங்கப்படவில்லை என அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாக்கி உள்ள நிலையில் அதனை தடை செய்வதை ஏற்க முடியாது.மனுதாரர் ஏற்கனவே பாக்கி தொகையை செலுத்தி விட்டதால் அவருக்கு மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

குறிப்பாக மின்சாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது அது அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை வாழ்க்கை உரிமையோடு இணைந்த ஒன்று என கருத்து தெரிவித்தார்.

மேலும் மனுதாரர் அந்த வீட்டில் வசிக்க உரிமை உள்ளதா என்ற விவகாரத்தை மின்சார ஆராய வேண்டிய அவசியம் இல்லை மாறாக சம்பந்தப்பட்ட நபர் அந்த வீட்டில் வசிக்கும் வரை அவருக்கான மின்சாரம் நியாயமற்ற காரணங்களுக்காக மறுக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், எந்தவொரு குடிமகனும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வார் என்று எதிர்பார்க்க முடியாது என தெரிவித்து மிக்கி ஜெய்ன் வீட்டிற்கான மின்சாரத்தை உடனடியாக வழங்குமாறு பி.எஸ்.இ.எஸ் ராஜதானி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam