Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)
நகராட்சி நிர்வாகம் துறையில் அதிகாரிகள் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவில் தமிழக அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நியமனங்களுக்கு ஒரு பதவிக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை என மொத்தம் ரூ. 634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆதிநாராயணன் என்பவர் மனு தொடர்ந்திருந்தார்.
விசாரணைக்கு உரிய குற்றம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி டிஜிபிக்கு நவம்பர் மாதம் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ