குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை!
தமிழ்நாடு, 17 டிசம்பர் (ஹி.ச.) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டிசம்பர் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கர்நாடகா தமிழகம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், தனது பயணத்தின் ஒரு பகுதியாக இன்று(டிசம்பர் 17) தமிழகம் வருகிற
திரௌபதி முர்மு


தமிழ்நாடு, 17 டிசம்பர் (ஹி.ச.)

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

டிசம்பர் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கர்நாடகா தமிழகம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், தனது பயணத்தின் ஒரு பகுதியாக இன்று(டிசம்பர் 17) தமிழகம் வருகிறார்.

நேற்று (டிசம்பர் 16).கர்நாடக மாநிலம் மாலவள்ளியில் நடைபெற்ற ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரிஸ்வர சிவயோகி சுவாமிகளின் 1066ஆவது ஜெயந்தி விழாவை குடியரசு தலைவர் முர்மு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வரவுள்ள அவர், வேலூரில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்து பூஜை செய்கிறார்.

இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. முக்கியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் மற்றும் ஸ்ரீபுரம் கோவிலின் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சிசிடிவி கேமராகள் பொருத்தப்பட்டும் மற்றும் கண்காணிப்பும் அதிகளவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செய்து வருகின்றன.

பொற்கோவில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நுழைவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொற்கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, தொடர்ந்து தெலுங்கானாவில் செகந்திராபாதில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam