பிரதமர் மோடி இன்று ஓமன் பயணம்!
புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.) 3 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) ஓமன் பயணப்படுகிறார். ஜோர்டான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மோடி அந்நாட்டு அரசுகளுடன் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பேச்சுவார்த்
மோடி


புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)

3 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) ஓமன் பயணப்படுகிறார்.

ஜோர்டான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மோடி அந்நாட்டு அரசுகளுடன் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

எத்தியோப்பியாவிற்குசென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார்.

பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன.

இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்நாட்டின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

பிரதமருக்கு, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருது வழங்கி கவுரவித்து உள்ளார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக ஓமன் புறப்பட்டார்.

ஓமன் நாட்டின் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அல் சையத் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஓமனுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam