ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம்
விழுப்புரம், 17 டிசம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (டிசம்பர் 17) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூ
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம்


விழுப்புரம், 17 டிசம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (டிசம்பர் 17) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்புமணி தொடர்ந்து பாமகபெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என இந்த கூட்டத்தில் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நடந்த பாமக நிர்வாகக் குழுவில், அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 46 ஆண்டுகளாக 96,000 கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கிய இந்த கட்சியில் அன்புமணிக்கு உரிமை இல்லை.

அன்புமணிக்கு உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்ப மனு வாங்குவதாக ராமதாஸ் தரப்பு பாமக தீர்மானம் அளித்துள்ளது. ஒட்டுக்கேட்பு கருவி வைத்து சொந்த அப்பனுக்கு ஆப்பு வைக்கத் துணிந்த அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். அப்போது என் பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருதேன். இருப்பினும் எனது பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்போது அன்புமணிக்கு சின்னமும் இல்லை கட்சியும் இல்லை என நாங்கள் வழக்கு தொடுத்தோம். அன்புமணி கட்சி உறுப்பினர் கூட இல்லை. அவரை நாங்கள் நீக்கி விட்டோம். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப்

போல் பாமக என்னும் மரத்தில் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி.

நாம் நட்ட ஒரு பூந்தோட்டம். அதில் பல குரங்குகள் நுழைந்து பூக்களை எல்லாம் தினமும் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணயம், டெல்லி அனைத்தும் சொல்லுயும் மூட கூட்டம் நடத்துவது இது போன்ற பம்மாத்து வேலைகளை எல்லம் செய்து வருவது தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத ஒரு கொடுமை. இதற்கு முன்னர் இப்படி எல்லம் நடந்ததில்லை.

அன்புமணி என் பெயரை சொல்லி என் பணத்தை போட்டு என் கொடியை பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு அன்புமணி கொடுக்கிறார். அது எனக்கு

வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b