நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
நெல்லை, 17 டிசம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி நகரம், கண்டியப்பேரி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அப்பகுதியில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மது போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் நெல்லை டவுன் கண்டிய பேரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டை வீசி
Petrol Bomb


நெல்லை, 17 டிசம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி நகரம், கண்டியப்பேரி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அப்பகுதியில் கடந்த நவம்பர்

20 ஆம் தேதி மது போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் நெல்லை டவுன் கண்டிய பேரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இதுகுறித்து கண்டியப்பேரி கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, திருநெல்வேலி நகரம் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(21) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பழையபேட்டை காந்திநகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் சஞ்சய்(19), திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் லட்சுமணன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN