Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 டிசம்பர் (ஹி.ச.)
எடப்பாடியார் மீது பொய் வழக்கு போட்டு வீழ்த்தி விடலாம் என்ற திமுகவின் கோரமுகத்திற்கு நீதிமன்றத்தின் மகத்தான தீர்ப்பின் மூலம் தற்போது தோல்விதான் கிடைத்துள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
ஜனநாயகத்தை சூழ்ச்சியால், சூதுவால், பொறாமையால், வஞ்சகத்தால், துரோகத்தால் என எதை வைத்தும் வெல்ல முடியாது என்பதை கூறுவதற்கு ஆயிரம் சான்றுகளை கூறலாம்.
நேற்றைய தினம் மகத்தான மகிழ்ச்சியான தீர்ப்பு வந்துள்ளது எடப்பாடியார் அம்மாவின் ஆட்சியில்,
11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக திமுக வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் திமுக தற்போது பின்வாங்கியுள்ளது.
ஏழை,எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடியார் காத்தார். இதன் மூலம் மாணவர்கள், மக்களில் இதயங்களில் எடப்பாடியார் வாழ்ந்து வருகிறார்.
இன்றைக்கு ஜனநாயகத்தை குறுக்கு வழியில், பேரிடர் போல திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கோயபல் பொய் பிரச்சாரத்தை மூலதனமாக வைத்து, மக்கள் ஏமாற்றி ஆட்சி கட்டிலில் திமுக அமர்வார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவின் துரோகத்தை முறியடித்தார், அதேபோல புரட்சித்தலைவிஅம்மா திமுகவின் சதிகளை, துரோகங்களை, சூழ்ச்சிகளை முறியடித்தார். தற்போது இருபெரும் தலைவர்களின் மறுவடிமாக உள்ள எடப்பாடியார் திமுகவின் சூது, சூழ்ச்சிகளை இதையெல்லாம் சட்டத்தின் வழி நின்று, ஜனநாயத்தின் வழி நின்று முறியடித்து மகத்தான முத்திரை படைத்து வருகிறார்.
நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் புள்ளி கோரப்படாத நிலையில், இதில் முறைகேடு என்றும்,ஊழல் என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொய்யான குற்றச்சாட்டை அரசியல் காழ்புணர்ச்சியோடு
பொய் வழக்கு போட்டு அதன் மூலம் விளம்பரம் செய்வதில் திமுகவிற்கு நிகர் திமுக தான்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மமே வெல்லும் என தாரக மந்திரத்தோடு இது போன்ற சூழ்ச்சிகளை எல்லாம் எடப்பாடியார் தகர்த்து எறிந்து வருகிறார்.
மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடியாரை வீழ்த்தி விடலாம் என்று திமுக நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது .
தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவின் உண்மை முகம்,கோரமுகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனால் தான் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற மக்கள் விரும்புகிறார்கள் திமுக என்ற குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
இன்றைக்கு திமுகவை வாரிசு அரசியலை வீட்டுக்கு அனுப்புகிற, திமுகவின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடியார் தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.குறிப்பாக மக்கள் விரும்புற சக்திகள் எல்லாம் ,பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்து வாழும் சக்திகள் எல்லாம் எடப்பாடியார் தலைமையில் அணிவகுக்கும் காலம் கனிந்து வருகிறது .
யானை வரும் பின்னே ,மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடியார் தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும். இன்றைக்கு மக்கள்எண்ணத்தை, சிந்தனையை நிறைவேற்றும் வகையில் 175 தொகுதிகளில், ஒரு கோடி மக்களை சந்தித்து எடப்பாடியார் சரித்திர சாதனையை படைத்துள்ளார்.
மக்களின் எண்ணங்களைப் போல அனைவரும் ஓரணியில் திரண்டு வெற்றி வாகை சூடுவோம் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam