Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 17 டிசம்பர் (ஹி.ச.)
1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.
இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கி அணிவித்துதான் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இதற்காக டிச.,23 -அதிகாலையில் தங்க அங்கி பவனி ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது.
நான்கு நாட்கள் பல்வேறு இடங்களில் பவனியாக வந்த பின்னர் 26 -ம் தேதி மதியம் பம்பை வந்தடையும் .
பின்னர் தலைசுமையாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படும். அன்று மாலை 6:30 -க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும்.
டிச.,27 மதியம் நடைபெறும் மண்டல பூஜையிலும் ஐயப்பன் விக்ரகத்தில் இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.
தங்க அங்கி பவனிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM