வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை
திருப்பூர், 17 டிசம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் மங்கலம் கருகம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாஜல் மண்டல்(வயது 25), பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உகன் முகியா(23), சத்தீஷ்கர் மாநிலம்
Prison


திருப்பூர், 17 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கருகம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாஜல் மண்டல்(வயது 25), பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உகன் முகியா(23), சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் குமார்(25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் .

கடந்த 13-1-2022 அன்று மாலை தாங்கள் வேலை செய்த பனியன் நிறுவன வளாகத்தில் நின்று 3 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30), சக்திவேல்(28), ரவிக்குமார் ஆகிய 3 பேர் கத்தியுடன் சென்று சாஜல் மண்டல், உகன் முகியா ஆகிய 2 பேரையும் தலை மற்றும் கைகளில் வெட்டி ரூ.2 ஆயிரம், 1 செல்போன் ஆகியவற்றையும், குமாரிடம் இருந்து 1 செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை உதவி அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. இவர்களில் ரவிக்குமார் இறந்து விட்டார். அவரை வழக்கில் இருந்து விடுவித்தனர். மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கீழ்கோர்ட்டு உத்தரவிட்டபடி, மணிகண்டன், சக்திவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN