Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 17 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி(வ/53) இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ்-யில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் இன்று சித்தம்பாக்கம் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாரியப்பன் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு திருவள்ளூருக்கு சென்றுள்ளார்.
அப்போது திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் ஈக்காட்டில் வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து தடம் எண் 505 செங்குன்றம் நோக்கி வந்த பேருந்து பலமாக இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாந்தி மீது பேருந்து பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லிஃப்ட் கொடுத்த மாரியப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் லிப்ட் கேட்டு வேலைக்குச் சென்ற பெண் பேருந்து மோதி பலியானது அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN