கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச) டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை போன்றவற்றால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 17) சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், க
பனிமூட்டம் காரணமாக சென்னையில் 11 விமான சேவை ரத்து


சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச)

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை போன்றவற்றால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று

(டிசம்பர் 17) சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோன்று சென்னைக்கு வரவேண்டிய டெல்லி, கொல்கத்தா, பாட்னா, புனே, இந்தூர் உள்ளிட்ட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு என 11 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b