Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த மூன்று நாட்களில் 2 ஆயிரம் அதிமுக மனுக்கள் பெறப்பட்டு 3 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொது தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம் கடந்த 15 தேதி தொடக்கியது. சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டு மனுக்களை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்களை பெற்றனர். புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ரூ.5 ஆயிரம் செலுத்தி பெற்றனர். ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்கள் விநியோகம் நடைபெறுகிறது. வாங்கிய விண்ணப்பங்களைகார், படி, சுவறு உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். மேலும் அங்கேயே புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
விருப்பமனு விநியோகம் டிச.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளில் ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன, செவ்வாய் கிழமை குறைவாக வாங்கினார்கள், நேற்று மட்டும் 690 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று வரை 2 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 3 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்று, நாளையும் நல்ல நாள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான தகவல் தொழில் நுட்ப பிரிவினர், தமிழகத்தில் உள்ள அனைத்து பொது தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தனர்.
அவர்களது விருப்ப மனுக்களை அமைப்புச் செயலாளர்கள் தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam