குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
தென்காசி, 18 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச
Courtallam Falls


தென்காசி, 18 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டன.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போதும் தண்ணீரின் சீற்றம் குறையாமல் கொட்டி வந்தது.

இருந்தபோதும், தற்போது மழை குறைந்து வெயிலின் முகம் காட்டத் தொடங்கிய நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தற்போது உற்சாகத்துடன் குற்றாலம் மெயின் அருவியில் குளித்து வருகின்றனர்.

ஐந்தருவியிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி இல்லை.

தடை தொடர்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN