ஈரோட்டில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.) கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்
What bro


ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது‌.

அதில், கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் நலம் விசாரிக்காததற்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?” இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ (what bro it’s very wrong bro) போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், விஜய் Present, absent என்றும் குறிப்பிட்டு, விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் இருந்து Absent என்றும், ஜனநாயகன் ஆடியோ லாஞ்சிற்காக மலேசியா செல்வது குறித்தும் அதிதல் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN