தனியார் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 27 மாணவர்கள் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை, 18 டிசம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல் சி.பி.எஸ்.சி பள்ளி உள்ளது. ப்ரீ கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று ( டிசம்பர் 18 ) காலை பள்
விபத்து


மயிலாடுதுறை, 18 டிசம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல்

சி.பி.எஸ்.சி பள்ளி உள்ளது.

ப்ரீ கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள்

கல்வி பயின்று வருகின்றனர். இன்று ( டிசம்பர் 18 ) காலை பள்ளி வேன் ஓட்டுநர் மஞ்சவாய்க்கால்

பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன்(60) என்பவர் பள்ளியிலிருந்து வேனை எடுத்துக்

கொண்டு புறப்பட்டார்.

நீடூர் வரை சென்று 33 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்ற வேன் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே தபால் நிலையம் முன்பு சென்று

கொண்டிருந்தபோது பின்னால் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு

வந்த மற்றொரு தனியார் வேன் ஐடியல் சிபிஎஸ்சி பள்ளி வேன் மீது மோதி விபத்தை

ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 33 மாணவர்களில் 27 மாணவர்களுக்கு

உள் காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அறிந்து பெற்றோர்கள் பதறி துடித்து மருத்துவமனையில்

குவிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் மருதவாணன் தலைமையில்

மருத்துவர்கள் மாணவர்களுக்கு எங்கெங்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று தீவிர

சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை

நடத்தி வருகின்றனர்.

மேலும், பல்வேறு தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன்

ஓட்டுநர் ஆனந்ததாண்டவபுரம் ஆற்காடு கீழத்தெருவை சேர்ந்த பிரபு (43) என்பவரிடம்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam