Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
விஜயின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தாகத்தை தான் ஏற்படுத்தும் அதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் 2026 இல் திமுக தான் ஆட்சி அமைக்கும் முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார்.
மேலும், விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தாகத்தை தான் ஏற்படுத்தும் அதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பதிலளித்துச் சென்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ