நெல்லையில் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடி!
திருநெல்வேலி, 18 டிசம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பெருமாள் குளம் – கல்லடி சிதம்பரம் செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. மலையடிவார பகுதியில் இருந்து இந்த கோயிலுக்கு வந்த கரடி ஒன
Nellai Hills Station


திருநெல்வேலி, 18 டிசம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பெருமாள் குளம் – கல்லடி சிதம்பரம் செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோயில் ஒன்று உள்ளது.

மலையடிவார பகுதியில் இருந்து இந்த கோயிலுக்கு வந்த கரடி ஒன்று, கோயில் சுற்றுசுவரை தாண்டி கோயிலுக்குள் சென்றுள்ளது. உள்ளே சென்ற அந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேட தொடங்கியுள்ளது.

அப்போது அங்கிருந்த ஒரு துணி மூட்டையில் உணவு இருக்கும் என நினைத்து அந்த கரடி அதனை கடித்து குதறியுள்ளது. ஆனால், அதிலும் எந்த உணவு பொருளும் இல்லாததால் கரடி ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றுள்ளது.

கரடி கோயிலுக்குள் சுற்றித் திரிந்தது கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் வெளியே நடமாட முடியாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ஊருக்குள் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN