துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சந்திப்பு
புதுடெல்லி, 18 டிசம்பர் (ஹி.ச.) பாஜ தேசிய தலைவராக இருந்த நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில்,பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின், பாஜகவின் கட்சியின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள
துணை குடியரசு தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணனுடன் பாஜக  தேசிய செயல் தலைவர் நிதின் நபின்  சந்திப்பு


புதுடெல்லி, 18 டிசம்பர் (ஹி.ச.)

பாஜ தேசிய தலைவராக இருந்த நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில்,பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின், பாஜகவின் கட்சியின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசில், சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்துக்களைக் கூறிக் கொண்டனர்.

இந்த நிலையில், நிதின் நபின், டில்லியில் இன்று (டிசம்பர் 18) துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

Hindusthan Samachar / vidya.b