இனி ரெயில்கள் புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
புதுடெல்லி, 18 டிசம்பர் (ஹி.ச.) ரெயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு
ரெயில்கள் புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு


புதுடெல்லி, 18 டிசம்பர் (ஹி.ச.)

ரெயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வருகிறது.

கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமப்பட்டனர்.

இதனால், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரெயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர்.

அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிப்பு செல்லும்.

இதர ரெயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.

இதை உடனே அமல்படுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM