Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 18 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அவர்கள் யார் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடலும் ,படுகாயம் அடைந்தவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் பரளை கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை 20 வயது என்பவர் மற்றும் சிக்கல் அருகே உள்ள அன்னிஉன்னி கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் பாண்டியன் (24 வயது )என்பவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் பெயர் தமிழரசன் (18 வயது) சிக்கல் அருகே உள்ள அன்ணிஉன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN