கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.) கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள, பின
கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)

கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள, பின்வரும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன:

கோவை ஹரித்வார் செல்லும் சிறப்பு ரெயில்

(வண்டி எண்: 06043) வருகிற 24.12.2025 அன்று கோவையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும். நான்காவது நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஹரித்வார் கோவை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06044) வருகிற 30.12.2025 அன்று ஹரித்வாரில் இருந்து இரவு10.30 மணிக்கு புறப்படும். நான்காவது நாள் காலை 4 மணிக்கு கோவை வந்து சேரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b