Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் டிரைவர்
(வயது 43) வசித்து வந்தார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை விஜயா தம்பதியரின் மகள் துர்கா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக துர்கா கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
டிரைவர் பச்சையப்பன் சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு மனைவியின் தாய் வீடான மணிமங்கலத்திற்கு குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பச்சையப்பனுக்கும், துர்காவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மனைவி துர்கா பச்சையப்பனின் கழுத்தில் துண்டை போட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, பச்சையப்பன் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். பின்னர், மனைவி துர்கா மங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் காவல் நிலைய போலீசார் பச்சையப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து துர்காவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN