Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரை:
அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் கட்சியில் இணைந்த பிறகு ஒரு விஷயம் முடிவாகி விட்டது. அதாவது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதி ஆகிவிட்டது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கும் மாவீரன் பொல்லான் அவர்களுக்கும் கொள்கை தலைவர், சமூக சீர்த்தத்தவாதி, எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தைத் தொட்டு நமக்கான ஒரு மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டிலிருந்து தலைவர் தொடங்குகிறார். வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதுதான் நம்முடைய குறிக்கோளா, லட்சியமா
ஈரோட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளும் நெசவாளர்களும் தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் துயரத்துடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியின் ஊழலால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மார்க்கை மட்டுமே நடத்தக்கூடிய நிர்வாகத்தையே கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தளபதி விஜய் அவர்களால் தான் மாற்ற முடியும். தவெகவால் தான் மாற்ற முடியும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை தவெக தான். சமீபத்தில் இளைஞர் மாநாடு மாதிரி ஒன்றை நடத்தினார்கள். அதில் இளைஞர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அப்பா, மகன் என இரண்டு இளைஞர்கள் இருக்கிறார்கள்.
மாநாட்டில் அந்த இளைஞர்கள் சொல்கிறார்கள் இளம் பெரியாராம், யார் இங்கே இளம் பெரியார். அவர்களுக்கு பெரியாரின் வரலாறு என்னவென்று தெரியுமா? முதலில் பெரியார் என எழுதி கொடுத்தால் படிக்க தெரியுமா இந்த ஈரோடு மண்ணில் 70 ஆண்டுகளாக சொற்பொழிவுகள், மாநாடுகள் என உழைத்தவர் பெரியார். அந்த 70 வருட உழைப்பை சிதைக்கும் விதமாக உங்கள் மகனுக்கு இளம் பெரியார் என பட்டம் கொடுக்கிறீர்கள். பெரியாரை இழிவு செய்யும்போது திராவிட கழகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் சமூக நீதி என்றால் என்ன என கேள்வி கேட்டவர் தான் உங்கள் மகன். சமூக நீதி என்னவென்று தெரியாதவருக்கு இளம் பெரியார் பட்டம் கொடுக்கிறீர்கள். யார் இங்கே இளம் பெரியார்? மக்களிடமே கேட்கிறோம். நீங்கள் சொல்லுங்கள் யார் இங்கே இளம் பெரியார்? பெரியார் அவர்களுக்கு முன்பு ஒரு தலைவர் உருவாகவில்லை. எதிர்காலத்திலும் உருவாக்கப்பட முடியாது என்பது தான் பெரியார் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் செலுத்தும் மரியாதை.
இங்கே, ஒரே பெரியார், ஒரே அம்பேத்கர், ஒரே காமராஜர், ஒரே தீரன் சின்னமலை, ஒரே பொல்லான். இத்தகைய தலைவர்களை நீங்கள் இழிவுப்படுத்தினால் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். 2026இல் மட்டுமில்லை 2026, 2031, 2036 என அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களிலும் தவெக தான் வெற்றி பெறும். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மிகப்பெரிய இழப்பிற்கு பிறகு உங்களுடைய சூது நிறைந்த செயல்களால் தலைவரை மக்களிடம் இருந்து பிரிக்க பார்த்தீர்ககள்.
ஆனால் இங்கே இருக்கக்கூடிய மக்கள் சக்தி, பெண்கள் சக்தி தலைவர் மீது நம்பிக்கையும் மாண்பையும் வைத்திருக்கிறார்கள். மக்களின் எழுச்சி இந்த ஆட்சியாளர்களை துரத்தக்கூடிய ஒரு தேர்தலாக இருக்கும் என்பதை பதிவு செய்துகொள்கிறேன்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
Hindusthan Samachar / Durai.J