Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
இனி எப்போதும் ஈரோடு தளபதியின் கோட்டை என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
கரூர் சம்பத்திற்கு பிறகு மூன்று மாதம் கழித்து தவெக தலைவர் விஜயின் பரப்புரை இன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற பகுதியில் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ஈரோடு வந்தடைந்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் நுழைவதற்கு முன்பாக தவெக நிர்வாகிகள் பேசினர். அப்போது தவெக பொதுச்செயலாலர் என்.ஆனந்த் உரையாற்றினார்.
ஈரோடு மக்கள் சந்திப்பு நிகச்சியில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது :
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், 2026-இல் தமிழகத்தின் முதல்வர், நம் வெற்றி தலைவர் தளபதி, உங்களைப் பார்க்க நம் ஈரோடு மாவட்டத்திற்கு வந்திருக்கிறார். நம் கொள்கைத் தலைவர் பெரியாரின் மண்ணில் நம் வெற்றி தலைவர் தளபதி வந்திருக்கிறார்.
மங்களகரமான மஞ்சள் மண்ணில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வந்திருக்கிறார். இனி எப்போதும் ஈரோடு தளபதியின் கோட்டை. உங்கள் குடும்ப வாக்குகளை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
நண்பர்களே நாம் இங்கு கூடியிருப்பது வெறும் கூட்டத்திற்காக அல்ல, ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கத்திற்காக கூடியிருக்கிறோம். தளபதியின் கரத்தை வலப்படுத்துவோம். ஒவ்வொரு வீட்டிற்கும் நம் கொள்கையை கொண்டு செல்லுங்கள்.
நமது வாக்கு தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தின் அஸ்திவாரம். தளபதியின் வழியில் தளபதியின் வெற்றிக்காக ஒன்றிணைவோம். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam