ஸ்டாலினுக்கு வாத்தியார் விஜய் தான் - தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ்!
ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.) ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் முதலாவதாக தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார். இதையடுத்து தவெக மாநில நிர்வ
அருண்ராஜ்


ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியவுடன் முதலாவதாக தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார். இதையடுத்து தவெக மாநில நிர்வாகிகள் தொடர்ச்சியாக பேசினர். கடைசியாக தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;

நாலரை வருடம் சரியாக ஆட்சி செய்யாமல், தேர்தல் நேரத்தில் 'அந்தத் திட்டம், இந்தத் திட்டம்' என அறிவிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? பள்ளிக்கூடத்தில் ஹோம்-ஒர்க் செய்யாத பையனை வாத்தியார் 'இம்போசிஷன்' (Imposition) எழுதச் சொல்வது போல இருக்கிறது. ஸ்டாலின் அவர்கள் இப்போது இம்போசிஷன் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை இம்போசிஷன் எழுத வைத்த 'வாத்தியார்' நம் தலைவர் விஜய் அவர்கள்தான்! ஒரு நல்ல ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று நம் தலைவர் உங்களுக்கு வகுப்பு எடுப்பார்; அப்போதாவது பார்த்துப் பழகிக் கொள்ளுங்கள்.

இறுதியாக பாஜக-வை பற்றி... மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றுவது, மாநில நிதிப் பகிர்வைக் குறைப்பது எனப் பல வேலைகளைச் செய்கிறார்கள். ஐ.பி.சி. (IPC), சி.ஆர்.பி.சி. (CrPC) சட்டங்களுக்குச் சமஸ்கிருதப் பெயர் வைக்கிறார்கள். இது ஒரு கூட்டுக் குடும்பம் போன்ற நாடு. இங்கே அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழி; அதை ஒருபோதும் புறக்கணிக்க விடமாட்டோம்.

மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - மக்களிடம் சம்பாதிக்கும் தலைவரா? மக்களுக்காகத் தன் கோடிகளை விட்டுவிட்டு வந்த தலைவரா? ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்தும் தலைவரா? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் தன் குடும்பமாக நினைக்கும் தலைவரா? போட்டோஷூட் நடத்தும் முதல்வரா? சேவை செய்யத் துடிக்கும் தலைவரா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

வீசும் புயலுக்கு வேலி போட முடியாது; அதுபோல நம் தலைவர் ஜெயிப்பதையும் யாராலும் தடுக்க முடியாது!

இவ்வாறு அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam