Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உரை:
பெரியார் பிறந்த மண்ணுக்கு வெற்றிக்கழகத்தின் தலைவர் வருகை தந்திருக்கிறார். கடலென கூடியிருக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போது நாளை தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைக்கக்கூடிய கூட்டமாக இந்த கூட்டம் இருக்கிறது.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல பேர் கனவு காணுவதாக அனைவரும் கூறினார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும் நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித்தளபதி தான்.
இதை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது என்பதை பெரியார் மண்ணில் இன்றைக்கு காணுகின்ற காட்சியில் பார்க்கலாம். தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டது போல ஏழை, எளிய மக்களுடைய கண்ணீரைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும் என்ற மக்களுடைய பல நாள்கள் கனவு இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கூட்டம் கூடும் கலைந்து போகும் ஆனால் நம்முடைய கூட்டத்தைப் பொறுத்தவரையிலும் எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற வெற்றிக்கழகத்தினுடைய தலைவருடைய வரலாற்றைப் படைப்பதற்கு பெருந்திரளாக இங்கே வருகை தந்திருக்கிறீர்கள்.
தலைவரைப் பொறுத்தவரையிலும் மனிதநேயமிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏனென்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என விட்டுவிட்டு மக்களுக்குப் பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சித்தலைவரைப் பார்த்தேன் இன்றைக்கு புரட்சித்தளபதியை இன்றைக்கு காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையிலும் இது தீர்ப்பளிக்கிற கூட்டம்.
நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்பதை காட்டும் வகையில் இங்கே ஆர்ப்பரித்து நின்றுகொண்டிருக்கிறீர்கள். நம்முடைய எதிர்காலம் பிரகாசமாக மாறப்போகிறது.
234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர் தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றைப் படைக்கிற அளவுக்கு வெற்றியைத் தருவீர்கள்.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
Hindusthan Samachar / Durai.J