Enter your Email Address to subscribe to our newsletters


ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு பயணிகள் தவிர, தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்தினர்.
இதனால் அவிநாசி சாலையில் இருந்து விமான நிலைய சாலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தி விசாரித்த பின் உள்ளே அனுப்பினர்.
அதேபோல் விமான நிலைய வருகை நுழைவு வாயிலில் அக்கட்சி தொண்டர்கள் நிற்க அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த முறை விஜய் கோவை வந்தபோது தவெக தொண்டர்கள் விமான நிலையத்தில் இருந்த ட்ராலிகள், தடுப்புகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.
இதனால் பாதுகாப்பு கருதி ஒய் ஜங்ஷன் பகுதியில் மட்டும் நிற்க போலீசார் அனுமதி வழங்கினர்.
இதனிடையே கோவை விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் விஜயமங்கலம் நோக்கி சென்றார்.
முன்னதாக தனியார் விடுதியில் ஓய்வெடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் நேரடியாக விஜயமங்கலம் சென்றார்.
Hindusthan Samachar / Durai.J