Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சாலையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று (18-12-25) நடைபெறவுள்ளது.
இதற்காக இன்று அதிகாலை முதலே ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள், விஜய் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பகல் 11 மணியளவில் விஜய் பரப்பரைக்கு வரவுள்ள நிலையில், காலை முதலே ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
காவல்துறையினர் அறிவுறுத்தல்களை கேட்காமல் கூட்ட அரங்கிற்குள் தொண்டர்கள் கூட்டமாக ஓடி வருவதால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் இன்று காலை பனையூரில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பட்டார்.
அங்கிருந்து தனி விமானம் வாயிலாக தற்போது கோவை வருகை தந்துள்ளார்.
கோவையிலிருந்து விஜய் காரில் ஈரோடு செல்கிறார்.
பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடைபெறும் இந்த பொதுக்கூட்ட மைதானத்தில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b