Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 18 டிசம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (35), தங்கம் மகன் சதீஷ்(29), செ்வராஜ் மகன் பாலசுப்பிரமணியன்(30), மற்றும் அருப்புக்கோட்டை வேல்முருகன் மகன் கார்த்திகைசெல்வன்(25) ஆகியோர் ஒரு காரில் சதுரகிரிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கி திரும்பியுள்ளனர். காரை கார்த்திக் ஓட்டியுள்ளார்.
இன்று (டிசம்பர் 18) அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை சென்ற போது அம்புலி ஆற்றுப் பாலம் அருகில் ஓட்டுநர் சற்று நிதானமிழந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று வேப்பமரத்தில் மோதி கவிந்தது.
சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் வந்து பார்த்து போது கவிந்த காருக்குள் 4 பேர் சிக்கி இருப்பது தெரிந்தது. உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டு காரில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரை நிமிர்த்த முடியவில்லை.
விரைந்து வந்த கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரகாஷ், பிரபு ஆகியோர் ஆம்புலன்ஸ்சில் இருந்த கயிற்றை எடுத்து காரில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் மீட்க முயன்றனர். இழுத்து நிமிர்த்த முடியவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் உதவியுடன் கார் நிமிர்த்த்தபட்ட பிறகு காரில் சிக்கி இருந்த 4 பேரையும் காயங்களுடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கார் மரத்தில் மோதியதும் உயிர் பாதுகாப்பு பலூன்கள் ஓபன் ஆனதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலிசார் விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b