Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம்.
அந்த வகையில் 2026ம் ஆண்டில் குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.
இரண்டு முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருடன் சந்திப்பு நடத்த இருக்கின்றனர்.
இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் டிசம்பர் 8ம் தேதி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின.
இரு தரப்பினரும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க இலக்கு வைத்துள்ளனர்.
இதனால் குடியரசு தின விழாவிற்கு ஐரோப்பிய தலைவர்கள் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த கால குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்!
* 2025- இந்தோனேஷியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ
* 2024- பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
* 2023- எகிப்து அதிபர் அப்தெல் பதா எல் சிசி
* 2021-2022ம் ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக யாரும் பங்கேற்கவில்லை
* 2020- பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனரோ
* 2019- தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா
* 2018- ஆசியான் அமைப்பின் 10 நாட்டு தலைவர்கள்
* 2017- அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது ஜயித் அல் நஹ்யான்
* 2016- பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலாண்டே
* 2015- அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா
* 2014- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே
* 2013 - பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM